நாவலடி இக்பால் சாதுலியாவுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு



 


(எச்.எம்.எம்.பர்ஸான்)


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனம் திங்கட்கிழமை (11) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


அண்மையில், தவறவிடப்பட்ட பெருமதி மிக்க தங்க நகைகள் மற்றும் பணத் தொகையினை கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்த நாவலடி பகுதியைச் சேர்ந்த முகம்மது முஸ்தபா இக்பால் எனும் முச்சக்கர வண்டி ஓட்டுனர் இந்த அன்பளிப்பினை செய்துள்ளார்.


ஒலிபெருக்கி சாதனத்தை பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் அவர்களிடம் முகம்மது முஸ்தபா இக்பால் கையளித்தார்.


இந்நிகழ்வில், அரபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் மௌலவி எம்.யூ.எம்.நளீம் ஸலாமி, பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல்.அன்ஸார், உதவி அதிபர் திருமதி பதுருன்நிஸா முயீஸ், பாட இணைப்பாளர் எச்.எம்.பஹாஸ்தீன், ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவர் எம்.எம். ஜெய்நிஸா, ஆசிரியர்களான எம்.எம்.ஏ. இம்தியாஸ், எம்.எம்.அர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பாடசாலையின் தேவை கருதி ஒலிபெருக்கி சாதனத்தை அன்பளிப்பு செய்துள்ள இக்பாலுக்கு அதிபர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.