மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலைக்கு வுழு நீர் தொகுதி வழங்கல்



கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் பாடசாலையில் மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு வுழு செய்வதற்கான நீர் தொகுதி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட இந்த நீர் வசதி, மாணவர்களின் நாளாந்த பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வுழு நீர் தொகுதியை திறந்து வைத்து மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரனீஸ், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பவுண்டேசனின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நீர் வசதி, மாணவர்களின் சுகாதார மற்றும் மத சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.