வெனிசுலாவில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253ஆக அதிகரித்துள்ளது.



 


வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253ஆக அதிகரித்துள்ளது.


7.2 மற்றும் 7.5 ரிச்டர் அளவுகளில் ஒரு நிமிட இடைவெளியில் பதிவான இந்த நிலநடுக்கங்களால் கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், 100க்கும் அதிகமான கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.


1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.