சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணரத்ன, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக அரச தரப்பு சாட்சியமாக மாற உடன்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது, சுற்றுலா மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 7.8 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி அரசியல் ரீதியான ரீசேர்ட்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டர்கள் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர குணரத்ன மற்றும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் ரூமி ஜவ்ஃபர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதான சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படவிருந்த இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சி.ஐ.டி. அதிகாரிகள் இவர்களைத் தேடி வருவதுடன், வெளிநாடு செல்லத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டிலிருக்கும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கைதுசெய்ய நீதிவான் பசன் அமரசேன ஏற்கனவே பிடியாணை பிறப்பித்துள்ளார்.
அவருக்கெதிராக சர்வதேச அளவில் அழைப்பாணை (International Summons) விடுக்க வேண்டுமாயின், அதற்கான சுயவிவர வாக்குமூலத்தை (நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பாஸ்வர குணரத்னவுக்கு பிணை அரச சாட்சி அங்கீகாரம்
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 127 ஆவது பிரிவின் கீழ் பாஸ்வர குணரத்ன நீதிவானிடம் வழங்கிய இரகசிய வாக்குமூலத்தையடுத்து, அவரை அரச சாட்சியாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. பிணை அனுமதி: விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவரை 1,00,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மற்றுமொரு சந்தேகநபர் மீதான நடவடிக்கை
இந்த வழக்கில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளரான ரூமி ஜவ்ஃபர் என்பவரை ஜூன் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை ஜூன் 17 அன்று நடைபெறவுள்ளது.


Post a Comment
Post a Comment