( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி நடராஜா கதீஷன் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை பதவிப் பிரமாணம் செய்தார்.
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் (Lions Club of Kalmunai Town) 2026/2027 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழாவும் கல்முனை ஆர்.கே.எம். சந்தியில் அமைந்துள்ள வைட் லோட்டஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் மாவட்டம் 306 D10 இன் மாவட்ட ஆளுநர் லயன் ஜி. ஷாஹிர் அஹமட் PMJF/PMAF பிரதம அதிதியாகவும் பதவியேற்பு அதிகாரியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வின் போது 2025/2026 ஆண்டுக்கான தலைவராகப் பணியாற்றிய லயன் ஏஎல்எம்
பாயிஸ் MAF அவர்களிடமிருந்து, 2026/2027 ஆண்டுக்கான தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள லயன் பொறியியலாளர் என். கதீஷன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
“Service Beyond the Limit” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த விழாவில், புதிய தலைவரின் அறிமுகத்தை கழக நிர்வாகியும், உபதலைவருமான லயன் எந்திரி.எம்.சுதர்சன் நிகழ்த்தினார்.
புதிய செயலாளராக லயன் சட்டத்தரணி அருள்.நிதான்சன், பொருளாளராக லயன் ஏ.கிஷோக் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்தனர்.


Post a Comment
Post a Comment