இறக்காமத்தில் நடைபெற்ற சமுர்த்தி கெக்குலு



 


நூருல் ஹுதா உமர்


இறக்காமம் பிரதேசத்தில் உள்ள சிறுவர்களின் கலை, கலாசார மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சமுர்த்தி கெகுலு சிறுவர் கழக கலாசாரப் போட்டி – 2026 நிகழ்வு சனிக்கிழமை இறக்காமம் கமு/சது/ மதீனா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம். எஸ். எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.எம். மக்பூல் அவர்களின் ஒருங்கிணைப்பில் இறக்காமம் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளரும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி காரியாலய நிர்வாக முகாமையாளர் ஏல். நௌபீர் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றது.

சிறுவர்களிடையே மறைந்திருக்கும் பல்வேறு திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவித்து வளர்ப்பதுடன், இலங்கை நாட்டின் பாரம்பரிய கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இப்போட்டி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் சமுர்த்தி கெகுலு சிறுவர் கழகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். சிறுவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலை சார்ந்த போட்டிகளில் பங்கேற்றனர்.

பாடல், பேச்சு, கவிதை, நடனம், நாட்டார் பாடல், நாட்டார் நடனம், அறிவிப்பு, ஓவியம், கட்டுரை எழுதுதல் மற்றும் உறையுல்  உள்ளிட்ட பல்வேறு கலை திறன்களை அடிப்படையாகக் கொண்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், போட்டிகளில் பங்கேற்ற சிறுவர்கள் தங்களுடைய திறமைகளைப் சிறப்பாக வெளிப்படுத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் சிறுவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

போட்டிகளில் பங்கேற்ற அனைத்து சிறுவர்களும் பாராட்டப்பட்டதுடன், சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய போட்டியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு எதிர்காலத்திலும் தங்களது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும் வகையில் ஊக்கமும் பாராட்டும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர்  திருமதி ஜுனைதா,  செயற்திட்டம் முகாமையாளர் எம்.எம். நப்ரிஸ்,  வலய உதவி முகாமையாளர் அஷ்ஷேய்க் ஏ. நியாஸ் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மகா சங்க தவைவர் உட்பட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிக்கு நடுவர்களாக சம்மாந்துறை கல்வி வலய பிரதி பணிப்பாளர் ஏ.எம்.எம் சியாத், இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.அமீர், சம்மாந்துறை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் எஸ்.எல். நிசார்,  ஓய்வு பெற்ற அதிபர் திருமதி ஐ.ஆர். எம். நஸீர், சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி எம்.எஸ். மஸாஹிரா, ஆசிரியர் ஏ ஆர்.எம். ரஊப், ரோஷான் ஏ. ஜிப்ரி (சிரேஷ்ட கவிஞர்) ஜே. ஹாரூன் (சிரேஷ்ட கவிஞர்), செயின் சித்தீக் (கலைஞர்) மற்றும் ஏ. எச். றகீப் (கலைஞர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.