( எம்.என். எம்.அப்ராஸ் )
அரசாங்கத்தின் "க்ளீன் ஸ்ரீ லங்கா’ கொள்கைத் திட்டத்தின் கீழ், ‘அத்தம’ தேசிய வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வு கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று(08) நடைபெற்றது. இதன் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இதனை அடுத்து பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிரமதான பணியிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா, பிரதேச செயலாளர்,ரீ.எம்.எம்.அன்சார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீட் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர்,பாதுகாப்பு பிரிவினர்,பொதுமக்கள் என பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment
Post a Comment