பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அடிக்கல் நடும் நிகழ்வு



 


வி.சுகிர்தகுமார்     

கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டீன் மூலம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு பகுதி சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் த.இராசநாயகம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தேசிய மக்கள் சக்தியின் பனங்காடு பிரஜா சக்தியின் தலைவரும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளருமான பிரபு பிரதி அதிபர் ஆசிரியர்கள் கிராம உத்தியோகத்தர் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் சமூக பிரதிநிதிகள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதேச செயலாளர் அடிக்கல்லினை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதன் பின்னராக இன்னும் பாடசாலைகளுக்கு தேவையான உதவிகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் ஊடாக அவற்றை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக பிரதேச செயலாளர் கூறினார்.