மீபே – இங்கிரிய வீதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று ஊழியர்கள் ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொழிற்சாலைக்குள் இருந்த டீசல் பீப்பாய் ஒன்றை இரும்பு ஒட்டு மூலம் பழுதுபார்க்க முயன்றபோது, அது திடீரென வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன


Post a Comment
Post a Comment