செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி



 


செட்டிபாளையம்  மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி ஆரம்பம்!


மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடைபவனி இன்று (28.11.2026)ஆம் திகதி  சிறப்பாக ஆரம்பமானது.


பாடசாலையின் எட்டு தசாப்த கால கல்விப் பயணத்தையும், கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் சாதனைகளையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.


பாடசாலையின் 80 ஆண்டுகால வரலாறு, வளர்ச்சி மற்றும் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனி, பாடசாலைச் சமூகத்தின் ஒற்றுமையையும், கல்வி நிறுவனத்தின் நீண்டகாலப் பயணத்தையும் வெளிப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் திருமதி சு. ஜெயகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. செ. மகேந்திரகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.


எட்டு தசாப்த கால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, பாடசாலைச் சமூகத்தினர் மத்தியில் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


#porativupattunews #jaffnanews #Todaysnews #TamilNews #cheddipalayamnews #vellavelinews #jaffnanews #TrincomaleeNews #AmparaNews #BatticaloaNews #sammanthurainews #SriLankaNews #