நவகமுவ பகுதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்து மூவர் காயம்:இருவர் கலைக்கிடம்!



 


கொழும்பு நவகமுவ தேவாலயத்திற்குப் பின்னால் இருந்த பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.


இன்று (8) மாலை மழையுடன் வீசிய பலத்த காற்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் நான்கு வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.


மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வேன்கள், ஒரு கார் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி ஆகியவற்றுக்கே சேதம் ஏற்பட்டுள்ளது.