(எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை பொது பஸ் தரிப்பு நிலையத்தின் பெயர் பலகை உடைந்த நிலையில் காணப்படுவதுடன் தீடிரென முழுமையாக கீழே விழும் ஆபத்தான நிலையில் தற்போது காணப்படுகினறதை காணமுடிகின்றது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பஸ் தரிப்பித்திற்கு வருகை தந்து காத்திருக்கும் பொது மக்களுக்கு கட்டிடத்தின் மேல் ஒரு பக்கம் பெயர் பலகை உடைந்த நிலையில் மற்றைய பகுதி எப்போது விழும் நிலையில் காணப்படுகின்றது.
பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி கல்முனை மாநகர சபை உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment
Post a Comment