25 இலட்சம் ரூபா பணத்தினை இலஞ்சமாக பெற்ற குற்றசாட்டின் பேரி்ல் கைது செய்யப்பட்ட, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதமன்றத்தினால் பிணை வழங்ப்பட்டுள்ளது.
15,000 ரூபா ரொக்கப்பிணையிலும்,10 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உபுல் தம்மிக்க குணதிலக 25 லட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கடந்த நான்காம் திகதி இலஞ் ஊழல் குற்றத்தடுப்பி பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
