அமெரிக்க கொலொராடோ பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் டெனிஸ் மேகில்வ்ரே (Dennis B. McGilvray) வினை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் மிக நீண்ட நாட்களாக என்னுள்ளே இருந்தது.
அதற்கு முதல் காரணம், நான் பிறப்பதற்கு முன்னரே ஒரு வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர் எங்கள் ஊரில் வந்து தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட்டிருந்தார் என்று பலரும் அவ்வப்போது சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் பற்றியும் அவரது ஆய்வு பற்றியும் அறிய வேண்டும் என்ற உந்துதல் சின்ன வயசிலேயே
ஏற்பட்ட ஒன்று.
ஏற்பட்ட ஒன்று.
எங்கள் ஊரைச் சேர்ந்த நஜ்முதீன் சேர், நிலாம் சேர் ஆகியோர் டெனிசின் நல்ல நண்பர்கள். நஜ்முதீன் சேர்தான் டெனிஸ் பற்றி முதலில் ஓரளவு விரிவாக எனக்கு விளக்கம் சொன்னவர்.
அவரது 'Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka'
என்ற நூலினையும் என்னிடம் நஜ்முதீன் சேர் கொண்டு வந்து தந்தார்.
1969-71 வரையுள்ள இரு வருட காலம், கிராமியப் பண்பு கொண்ட அக்கரைப்பற்றுக்கு ஒரு அமெரிக்க மானிடவியல் ஆய்வாளர் ஏன் வந்திருந்தார் என்பதற்கான விரிவான விடைதான் இந்த நூல்.
இனவரைவியலில் (Ethnography) - அதிலும் கிழக்கு மாகாணம் குறித்து - குறிப்பான ஈடுபாடுள்ளோருக்கு பயன் தரும் விரிவான, ஆழமான ஆய்வு நூல்.
இம்மாத ஆரம்பத்தில் ஒரு ஆய்வரங்கில் பங்கேற்க பேராசிரியர் டெனிஸ் இலங்கை வந்திருந்தார். முன்பொரு தடவை, அவரை அப்போது பொரல்லையில் இருந்த நிலாம் சேரின் வீட்டில் சந்தித்திருக்கிறேன். "எப்படி சுகமா?" என்று தமிழில் கேட்டபடி வந்தார். கொஞ்சம் தமிழ் பேசுவார். அப்போது சில விஷயங்கள் பேசியதோடு சரி.
கல்கிஸ்ஸவிலுள்ள நிலாம் சேரின் புதிய வீட்டில், இம்முறை பேராசிரியரை மீண்டும் சந்தித்து விரிவாகப் பேச முடிந்தது. எனது M.Phil ஆய்வு தொடர்பாகவே கலந்துரையாடல் இடம்பெற்றது. மிகுந்த ஆர்வத்தோடு பயனுள்ள பல தகவல்களையும், தகவல் மூலங்களையும் பரிமாறிக் கொண்டார்.
அந்த இடத்திலேயே எனக்குத் தேவையான விடயங்களை உள்ளடக்கி மின்னஞ்சல் ஒன்றை வரைந்து எனது மெயிலுக்கு அனுப்பினார். நாட்டுக்குச் சென்றதன் பின்னர், தனது நூலகத்தில் இருந்து மேலும் தகவல்களைத் திரட்டித் தருவதாகச் சொன்னார்.
திடீரென்று அறைக்குள்ளே சென்ற அவர் கெமராவுடன் திரும்பி வந்தார். என்னை ஒரு கிளிக் செய்தார். இப்படியான பேராசிரியர்களை இங்கு காண்பது மிக அபூர்வம். அதற்காக பேராசிரியர் டெனிசுக்கும் நிலாம் சேருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இதற்கு மேலதிகமாக டிசம்பர் முதலாம் நாளன்று, பேராசிரியரும் கோம்பை அன்வரும் நானும் நிலாம் சேரின் வீட்டில், இன்னொரு சந்திப்பின்போது சுவையான உணவுடன் விதவிதமான கருத்துக்களையும் சேர்த்து உண்டோம் என்பது இன்னொரு இனிய தகவல்.
இறுதியாக பேராசிரியர் டெனிஸ் குறித்து, பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் எழுதியுள்ள பயனுள்ள குறிப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
The socio-cultural life of the Muslims of Sri Lanka in general and particularly of the Eastern Muslims has so far not been studied well.
It is a fertile field for sociologists, social and cultural anthropologists, linguists and folklorists.
There are very few such specially trained Sri Lankan Muslim scholars working in this field today.
Some of the foreign scholars have done some pioneering work in this area of studies during the last three or four decades.
To my knowledge Nur Yalman was the pioneer who dealt with some of the cultural aspects of Eastern Muslims in his book Under the Bo Tree: Cast, Kinship and Marriage in the Interior of Ceylon, published in 1967. He included Sinhalese, Tamils and Muslims in his studies.
He later motivated one of his students, Dennis McGilvray, to do his research in the East and he did his field work in Akkaraippattu for two years at the beginning of the 1970s on the matriclan system among the Muslims and Tamils of the area for his Ph.D.
Later McGilvray extended his field work to cover the Batticaloa district and some part of the South. He is the only scholar who extensively studied the socio, cultural and political life of the Eastern Muslims and has published a number of scholarly papers and books on the subject.
His recent book Crucible of Conflict: Tamil and the Muslim Society on the East Coast of Sri Lanka is a comprehensive work on the subject based on the field studies he had done for the last 40 years.

