நீதவானின் காரின் மீது கல் வீசிய 4 பேர் கைது








-ஹுஸைன்-(வைப்பகப் படம்)
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் கடந்த திங்கட்கிழமை (28) நீதவான் ஒருவரின் காரின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் 04 சந்தேக நபர்களை புதன்கிழமை (30) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை மேற்கொண்டதின் பேரில் மேலும் ஒருவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 
15 வயதுடைய 02 பேரும் 16 வயதுடைய 02 பேருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அக்கரைப்பற்றில் மாவட்ட நீதிவானாகக் கடமையாற்றுபவரின் காரின் மீதே இந்தக் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.