
சீனாவின் ஷென்ஜென் நகரில் அண்மையில் சரிந்த குப்பை-மண் குவியலை அந்த இடத்தில் ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்திருந்த உள்ளூர் அதிகாரி தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவதாக பொலிசார் கூறுகின்றனர்.
குப்பை-மண் குவியல் சரிந்ததில் டஜன் கணக்கானோர் புதையுண்டு உயிரிழந்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தவர் அந்த ஊரின் நகர அபிவிருத்தி நிர்வாகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரி என பொலிஸ் அறிக்கை கூறுகிறது.
பாதுகாப்பு விதிகளை மீறி இந்த குப்பை-மண் குவியலுக்கு அனுமதியளித்த அதிகாரி ஸூ யுவனன் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று முன்னதாக பெயர் வெளியிட்டிருந்தது.
குப்பை-மண் சரிவில் எழுபது பேரின் கதி என்ன என்று இன்னும் தெரியவராமல் உள்ளது.
நடந்த விபத்தில் தங்களுக்கு பொறுப்பு உண்டு என்று கருதிய கருதிய சீன அரசு அதிகாரிகள் அண்மைக் காலத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரியும் மூன்றாவது சம்பவம் இது என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
