மியன்மார்: இராணுவம் பற்றிய பேஸ்புக் கருத்துக்காக பெண்ணுக்கு சிறை



மியன்மாரில் இராணுவத்தை ஏளனம் செய்து சமூக வலைத்தளம் ஒன்றில் 

கருத்துக்களை தெரிவித்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 6-மாதம் சிறைத் தண்டனை அளித்துள்ளது.

ஜனநாயக-ஆதரவு தலைவி ஆங் சான் சூ கியின் பாரம்பரிய ஆடைகளுடன், அந்நாட்டு இராணுவத்தின் புதிய சீருடையின் நிறங்களை ஒப்பிட்டு வெளியான பேஸ்புக் கருத்து தொடர்பிலேயே கடந்த அக்டோபர் மாதம் அந்தப் பெண் கைதுசெய்யப்பட்டார்.
எந்தவொரு தொலைத்தொடர்பு வலையமைப்பு மூலமாகவும் அவதூறு செய்வதை தடைசெய்யும் பரந்துபட்ட அர்த்தங்களை கொடுக்கக்கூடிய சட்டம் ஒன்றினாலேயே சாவ் சாண்டி டுன் என்ற அந்தப் பெண்ணுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேஸ்புக் கருத்துக்களை தான் வெளியிடவில்லை என்றே அந்தப் பெண் கூறியிருந்தார்.