சிரியாவில் கடந்த மாதத்திலிருந்து இதுவரை மேலும் பதினாறு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
சிரியாவில் முற்றுகையிடப்பட்டுள்ள மதாயா நகருக்கு உதவித் தொடரணி நுழைய கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டதிலிருந்து இதுவரை மேலும் பதினாறு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக மருத்துவ தொண்டு நிறுவனமான எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
அந்நகரில் போஷாக்கின்மையால் முன்னூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது முப்பது பேராவது உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஜெனிவாவில் பேச்சுக்கள் நடக்கும் சமயத்தில் எம்.எஸ்.எஃபின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
வெள்ளியன்று தொடங்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களை புறக்கணித்த சிரியாவின் முக்கிய எதிரணி குழுக்கள், சனிக்கிழமை பிற்பகுதியில் ஜெனிவாவுக்கு வந்திறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.