ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குறைந்தது பத்து பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.Image copyright
வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர்
ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த குடியேறிகளில் குழந்தைகள் அடங்கலாக குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் லெஸ்போஸ் தீவுக்கு வரமுயற்சித்ததாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர். 75 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் 20 பேரைக் காணவில்லை என்று உயிர்தப்பிய ஒருவர் கூறியுள்ளார்.
வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர்.

