மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்களுக்கு வழங்கும் பயிற்சிக் காலத்தை 40 நாட்களாக உயர்த்துவதற்கு தீர்மானித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் கூறியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு முதல் தடவையாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 21 நாட்கள் பயிற்சி வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் தொழில்முறை திறன்கள், திறமைகளை மேம்படுத்தல், தொடர்பாடல் திறமை உள்ளிட்ட பல விடயங்களில் பயிற்சி வழங்குவதுடன் அதனை 40 நாட்களாக நீடிப்பதன் மூலம் இந்தப் பயிற்சி மேலும் சிறப்பாக அமைவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

