(கிசாந்தன்)
மலர்ந்த்திரக்கும் புது வருடத்தில் மலையக மக்கள் அனுபவிக்கும் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்துள்ளதாக இலங்கை தழிலரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அமரர்.சந்திரசேகரனின் நினைவு தினத்தை கொண்டாட முதன்முறையாக மலையக பிரதேசத்திற்கு தனது விஜயத்தை மேற்கொண்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் 01.01.2016 அன்று காலை நடைபெற்ற புதுவருட விசேட பூஜையில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்த அனைத்து இந்துகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த பின் கொட்டகலை நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள எதன்சைட் தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு தொழிலாளர்கள் மத்தியில் அவர்களின் குறைகளை கேட்டறிந்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்..
அமரர். சந்திரசேகரனின் நினைவுத்தினமான 01.01.2016 அன்று என்னை முதன்முதலாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அழைத்திருந்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளும் இந்த வேளையில் தோட்ட தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக கேட்டறிய வாய்ப்புக்கிட்டியமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த நாட்டில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னோடிகளாக திகழ்ந்த தோட்ட தொழிலாளர்கள் தாங்கள் அனுபவிக்க முடியாத பல்வேறுப்பட்ட உரிமைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. இந்த உண்மைகளை வென்றெடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இவர் இதன்போது தெரிவித்தார்.

