கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள மெனிங் பொது சந்தையை பேலியகொடைக்கு இடமாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட கொழும்பு நகர அபிவிருத்து திட்டம் (2008-2020) புறக்கோட்டை பிரதேசத்தை ஒன்றிணைந்த அபிவிருத்தி வலயமாக அடையாளப்படுத்தியுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் படி, பழைய சென் ஜோன் மீன் விற்பனை சந்தை பேலியகொடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், காய்கறி மற்றும் பழவகை விற்பனை சந்தையையும் பேலியகொடைக்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனூடாக தற்போது மெனிங் பொது சந்தை உள்ள பகுதியில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியகொடையில் உள்ள 25 ஏக்கர் நிலப்பரப்பில், நான்கு பில்லியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடனும் புதிய மெனிங் பொது சந்தையை நிர்மானிக்கும் யோசனையை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக அமைச்சரவையில் முன்வைத்திருந்தார்.

