அட்டாளைச்சேனை சந்தேக நபர் கைது



எஸ்.ரி.ஜமால்டீன்

இரவுநேரத்தில் வீட்டில் கொள்ளைசந்தேகநபர் கைது.அட்டாளைச்சேனையில் சம்பவம்.

அம்பாறைமாவட்டம்அட்டாளைச்சேனை -14 மஸ்ஜிதுல் வீதியில் உள்ளவீடொன்றில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாகசந்தேகநபர் ஒருவரைநேற்றுமாலை (27) அக்கரைப்பற்றுபொலிஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் அட்டாளைச்சேனை-15 ஐச் சேர்ந்த 34 வயதுடையநபர் எனபொலிசார் தெரிவித்தனர்.கைதுசெய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாகமேலும் தெரியவருவதாவது

கொள்ளைநடைபெற்றவீட்டில் வீட்டின் திருத்தப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கம் போதுகடந்தடிசம்பர் மாதம் 8 ஆம் திகதி இரவுவீட்டினுள் புகுந்தகொள்ளையர்கள் வீட்டினுள் இருந்த 40 ஆயிரத்து 400 ரூபாபணம், 68 ஆயிரத்து 400 ரூபாபெறுமதியான இரு கைத்தொலைபேசிகள்,டெப் ஒன்றுஎன்பனகொள்ளையிடப்பட்டதாகவீட்டுஉரிமையாளரானபெண் பொலிஸில் முறைப்பாடுசெய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாகவிசாரணைமேற்கொண்டபொலிசார் நீதிமன்றஉத்தரவைப்பெற்றுகளவாடப்பட்டகைத்தொலைபேசிவைத்திருக்கும் நபரைகுறித்தநிறுவனத்தின் உதவியுடன் கண்டுபிடித்துஅவரையேநேற்று மாலைகைதுசெய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாகமேலதிகவிசாரணைமேற்கொண்டபொலிசார் இன்னுமொருமுக்கியசந்தேகநபரைகைதுசெய்யயுள்ளதாகபொலிசார் மேலும் தெரிவித்தனர்.