மலையக மக்கள் முன்னணியின் தனி வீட்டு கிராமம்



(க.கிஷாந்தன்)

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தனி வீட்டு கிராம வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டும் விழா 23.01.2016 அன்று காலை வைபவ ரீதியாக டயகம சந்திரிகாமம் கிராமத்தில் நடைபெற்றது.

இதில் வீடு வசதி அற்ற 25 குடியிருப்பாளர்கள் பயன்பெறுவதற்காக வங்கி கடன் ஊடாகவும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நன்கொடை பணம் ஊடாகவும் வீடுகளை அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. இதற்கான காணியை தோட்ட நிர்வாகம் இம்மக்களுக்கு வழங்கியுள்ளது.

இதில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இம்முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் உள்ளிட்ட துாட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதையும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் பலர் புதிய கிராம வீட்டுக்கான அடிக்கல் நாட்டுவதை படத்தில் காணலாம்.