புதிய கிராம வீடமைப்பு திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்பம்



தோட்ட லயத்திலிருந்து புதிய கிராமத்திற்கு குடும்பத்திற்கோர் தனி வீடு என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அபிவிருத்தி நோக்கத்தின் கீழ்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடத்தலின் பேரில், “பசும்பொன்” புதிய கிராம வீடமைப்பு திட்டம் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் தோட்ட வரலாற்றில் முதன் முறையாக புதிய கிராமங்களை அமைக்கும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள்உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் 30.01.2016 அன்று திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அக்கரபத்தனை சின்ன தோட்டத்தில் (பெங்கடன்) நடைபெற்றது.

அதேபோல், 31.01.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  2  மணிக்கு பொகவந்தலாவ கொட்டியாக்கொல்லை தோட்டத்தில்  அமைச்சரின் தலைமையில் புதிய கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது.

30.01.2016 அன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் வைபவத்தில் அக்கரப்பத்தனை சின்ன தோட்ட மக்களுக்கு 114 வீடுகளும் 31.01.2016 அன்று நடைபெறும் வைபவத்தில் 186 வீடுகளும் அமைவாக மலையக வரலாற்றில் முதன் முறையாக மொத்தமாக 300 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கை முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராமங்களில் விளையாட்டு மைதானம்வாசிகசாலைசனசமூக நிலையம்அஞ்சலகம்,சிறுவர் காப்பகம்மின்சாரம்குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் உட்பட சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி அக்கரப்பத்தனை சின்ன தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், எம்.திலகராஜ், அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜ பிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (ட்ரஸ்ட்) தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட ஏற்பாட்டாளர்கள், உபதலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.