ஆஸ்திரேலியன் ஓபன்:செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி




 மகளிர் டென்னிஸில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் செரினா வில்லியம்ஸ் ஆஸ்திலேயின் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
அவரை ஜெர்மனியின் அஞ்சலீக் கேர்பர் 6-4, 3-6, 6-4 என மூன்று செட் கணக்கில் தோற்கடித்து தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
டென்னிஸ் தரவரிசையில் ஏழாம் இடத்தில் உள்ள கெர்பர், மெல்பர்ன் பார்க்கில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடந்த 1999ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியில் ஸ்டெஃபி கிராஃப் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்ற பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஒன்றை வென்றுள்ள முதல் ஜெர்மனிய வீராங்கணை இவர் தான்.
செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றுள்ள கெர்பர்
இதுவரை 26 கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள 34 வயதான செரினா வில்லியம்ஸ் இதுவரை ஐந்து முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார்.
இம்முறை செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றிருந்தால், தொடர்ந்து 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை ஸ்டெஃபி கிராஃப் வென்ற சாதனையை அவர் எட்டியிருப்பார்.
ஆஸ்திரேலியன் ஓபன் வெற்றியை அடுத்து, மகளிர் டென்னிஸ் தரவரிசையில் கெர்பர் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதுவரை செரினா வில்லியம்ஸுக்கு எதிரான ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே கெர்பர் வெற்றிப்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதி ஆட்டம் ஒன்றிலும் அவர் முதல் முறையாக விளையாடியுள்ளார்.