எக்னெலிகொட அக்கரைப்பற்றில் கொலை?




ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு அக்கரைப்பற்று பிரதேசத்திலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் அறியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்கரைப்பற்று காட்டுப் பிரத்தில் அல்லது ஆழ்கடலில் எக்னெலிகொட கொலை இடம்பெற்றிருக்கலாம் என புலனாய்வுத் திணைக்களம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இவர் கொலை செய்யப்பட்ட சரியான இடத்தைக் கண்டறிய தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பிரகீத் எக்னெலிகொட கிரிதலே இராணுவ முகாமிலிருந்து கண் கட்டிய நிலையில் அழைத்துச் செல்லப்பட்டு அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டது என்பதற்க முக்கிய சாட்சிகள் காணப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிரித்தலை முகாமிலிருந்து எக்னெலிகொடவை கடைசியாக அழைத்துச் சென்ற இராணுவ குழுவுக்குப் பொறுப்பான கேர்ணலின் கையடக்கத் தொலைபேசி இந்த சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களின் பின்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் செயற்பட்டுள்ளது என்பதற்கான சாட்சிகள் தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.(Daily Ceylon)