திருகோணமலை – சம்பூர் பிரதேசத்தில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் வீசப்பட்ட சிறுவன் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
6 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6.00 அல்லது 7.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த மாணவர், இந்த வருடம் முதலாம் தரத்தில் பாடசாலையில் இணைந்து கொள்ளப்படவிருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
