பூச்சியங்கள் எத்தனை சேர்ந்தாலும் மொத்தக் கூட்டுத் தொகையும் பூச்சியமே. எனவே கூட்டு எதிர்க் கட்சி தொடர்பில் மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள சகலரும் பூச்சியம் போன்றவர்கள். அவர்களின் கூட்டு உறுதியற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

