பாராளுமன்றத்தில் நாளை மற்றும் மறுதினம் (24) விஷேட விவாதம்




புதிய அரசியலமைப்பை தயாரிக்க, பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக நியமிக்கும் யோசனை தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) விஷேட விவாதம் இடம்பெறவுள்ளது.
குறித்த யோசனையை கடந்த ஜனவரி மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதில், அரசியலமைப்பு பேரவை தலைவராக சபாநாயகரும் மேலும் 07 உப தலைவர்களும் நியமிக்கப்பட்ட வேண்டும் என முன்மொழியப்பட்டிருந்தது.
எதுஎவ்வாறு இருப்பினும் ஆளும், எதிர்க்கட்சியினரிடம் நிலவிய கருத்து வேறுபாடு காணமாக, பிரதமரின் இந்த யோசனையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது பிற்போடப்பட்டது. இந்தநிலையில் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24) இது தொடர்பிலான விஷேட விவாதம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் நாளையதினம் விஷேட சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள, கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார். குறித்த சந்திப்பு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.