அதிபர் சேவை தரம் 3 பரீட்சைமுடிவுகள் வெளியாகின!




(காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா )
அதிபர் சேவை தரம் 3 பரீட்சைமுடிவுகள் வெளியாகின!
மொத்தம்4079பேர் தெரிவு:வடக்கில் 420பேர்:கிழக்கில் 327பேர்!
கல்வியமைச்சு நடாத்திய இலங்கை அதிபர் சேவை தரம் 3 பதவிக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரஸ்தாப போட்டிப்பரீட்சை நாடளாவியரீதியில் கடந்தாண்டு நவம்பர் மாதமளவில் நடைபெற்றது.
நாடளாவியரீதியில் 4079 பேர் பரீட்சையில் நேர்முகப்பரீட்சைக்காக தகுதிபெற்றுள்ளனர். அவர்களின் பெயர்விபரம் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற 4079 பேரில் வடக்கு மாகாணத்திலிருந்து 420பேரும் கிழக்கு மாகாணத்திலிருந்து 327பேரும் தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்கான நேர்முகப்பரீட்சை வெகுவிரைவில் நடைபெறுமென கல்வியமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
வரலாற்றில் பெருந்தொகையான அதாவது 4000 பேர் தரம் 3 அதிபர்களாக நியமிக்கப்படவிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

கிழக்கில் 327பேர் தெரிவு!
கிழக்கு மாகாணத்தில் மூவினங்களையும் சேர்ந்த 327ஆசிரியர்கள் இவ்அதிபர் பரீட்சையில் நேர்முகப்பரீட்சைக்கான தகுதிபெற்றுள்ளனர்.
அம்பாறை சிங்களமொழிமூலத்தில் 47பேர் தெரிவாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 93பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 66பேரும் கல்முனைக்கல்வி மாவட்டத்தில் 121பேரும் தெரிவாகியுள்ளனர்.
கல்முனைக்கல்வி மாவட்டத்தில் மருதமுனையிலிருந்து 17பேரும் சம்மாந்துறையிலிருந்து 14பேரும் அதிகூடிய எண்ணிக்கையில் தெரிவாகியிருப்பது பதிவாகியுள்ளது.

அம்பாறை தமிழ்ப்பிரதேசங்களில் 24பேர் தெரிவு!
அம்பாறை தமிழ்ப்பிரதேங்களில் 24பேர் தெரிவாகியுள்ளனர்.

காரைதீவில் நால்வர்!
காரைதீவில் நால்வர் தெரிவாகியுள்ளனர். சீனித்தம்பி திருக்குமார்(வலயக்கல்விப்பணிமனை சம்மாந்துறை) ஜெயக்குமார் பிரசன்னா(காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரி) செல்வராசா சிவயோகராசா(மாணிக்கமடு அ.த.க.பாடசாலை) திருமதி தேவகௌசல்யா குலேந்திரன்(காரைதீவு சண்முகா மகா வித்தியாலயம்) ஆகியோரே தகுதிபெற்றவர்களாவர்.

வீரமுனையில் மூவர் !
வீரமுனையில் வீரமுனை இ.கி.மகாவித்தியாயலயத்தைச்சேர்ந்த பி.பரமதயாளன் திருமதி சத்யா செந்தமிழ்ச்செல்வன் வளத்தாப்பிட்டி பாடசாலையைச்சேர்ந்த எஸ்.இளங்கோவன் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

கல்முனையில் எண்மர்!.
கல்முனையில் ஆர்.உதயன் எஸ்.சஜிந்திரன் வி.சௌஜன் எஸ்.ரவீந்திரகுமார் கே.கிரிதரன் ஆர்.எ.சார்ள்ஸ் எஸ்.சிவகரன். கே.பாஸ்கரன்

அக்கரைப்பற்றில் அறுவர்!
அக்கரைப்பற்றில் வி.இராசவேல் எம்.சாந்தேஸ்வரன் எஸ்.அனந்தருபன் ரி.இந்திரன்.ரி.இராசநாதன் திருமதி யு.இராசநாதன்.

தம்பிலுவில்லில் மூவர்!
தம்பிலுவில்லில் ஜி.பவனன் எஸ்.தர்மசீலன் ஜே;.வசந்தேந்திரஸ்ரீ