உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் 7 பேரின் உறுப்புரிமை உடன் ரத்து



கட்சியையும், தலைமையையும் விமர்சித்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று தீர்மானம் எடுத்துள்ளது.
இந்தவகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் ஏழு பேரின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்க கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.
அத்துடன், இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளவும் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு கூட்டு எதிர்க் கட்சியின் எந்தவொரு வேண்டுகோளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியது. இதன்போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.