இன்றும் பிரித்தானியர் அமைத்த லயன்களிலேயே 56வீத மலையகத்தினர் வாழ்ந்துவருகின்றனர்.
லயனோ காணியோஅவர்களுக்கு சொந்தமில்லை:
ஜ.நா.மனிதஉரிமைஆணையாளரிடம் எச்டிஓ.சிவப்பிரகாசம் எடுத்துரைப்பு!
காரைதீவு நிருபர்வி.ரி.சகாதேவராஜா
மலையகதமிழ் மக்கள் வரலாற்றுரீதியாக பல்வேறுபாகுபாடுகளுக்கும், மனிதஉரிமைமீறல்களுக்கும் உள்ளாக்கபட்டுவருகின்றஒருசமூகமாகக் காணப்படுகின்றனர். இலங்கையில் நான்காவதுசிறுபான்மை இனமாகஅடையாளம் காணப்பட்டுள்ளமலையகதமிழ் மக்கள் ஏறக்குறைய 1.5 மில்லியன் சனத்தொகையைகொண்டுள்ளனர்.
அவர்களில் 56வீதமானோர் இன்றும் பிரித்தானியர் அமைத்துக்கொடுத்த லயன் காம்பராக்களிலேயே வாழ்ந்துவருகின்றனர். ஆனால் அந்த லயன் காம்பராவோ அது அமைந்துள்ள நிலமோ அவர்களுக்கு உரிமையாக்கப்படவில்லை. அதாவது நிலமற்ற சமுதாயமாகவே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஜக்கியநாடுகள் மனிதஉரிமைஆணையாளர்செயிட் அல் ஹீசைன் னைச் சந்தித்துகருத்து தெரிவித்தமனிதஅபிவிருத்திதாபனதலைவரும்,சர்வதேசவிவசாயதொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர்நாயகமுமான. பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
இலங்கைசிவில் சமூகத்தின் குழு சார்பாக ஜ.நா. மனிதஉரிமைஆணையாளர்திரு. செயிட் அல் ஹீசைன் அவர்களை கொழும்பு ஜ.நா. தலைமையகத்தில் சந்தித்தார்.
திரு.சிவப்பிரகாசம் மேலும் கூறியதாவது,
இலங்கையில் கடந்த ஜனவரி 2015ன் பின் தெரிவுசெய்யப்பட்டுள்ளநல்லாட்சிக்கானஅரசாங்கம் இலங்கைசிறுபான்மைமக்களின் நலன்கள்,உரிமைகள் குறித்துகரிசனைசெலுத்திவருகின்றமைபாராட்டுக்குரியது. என்றாலும்,அந்நடவடிக்கைகள் சிறுபான்மைமக்களைபொறுத்தவரையில் திருப்திகரமானதாக இல்லை. மேலும் அரசாங்கங்கள் சடுதியானஅபிவிருத்திநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டியுள்ளது. அதேவேளைமலையகதோட்டப் பிரதேசமக்களைப் பொறுத்தவரையில்,வரலாற்றுரீதியாகபல்வேறுபாகுபாடுகளுக்கும்,அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கபட்டுவந்துள்ளனர்.
இலங்கையில் மிகவறுமைக்குஉள்ளாக்கப்பட்டசமூகமாகக் காணப்பட்டனர். ஆனால் அது 2009ஃ10இல் 9மூ வேகமாகவீழ்ச்சியடைந்துள்ளது. இப்புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மைகேள்விக்குறியாகியுள்ளது.
மலையகபெருந்தோட்டமக்களின் நிலம்-மற்றும் வீட்டுஉரிமைசர்ச்சைக்குரியவிடயமாகக் காணப்படுகின்றது. இன்றுவரையும் 56மூ மக்கள் பிரித்தானியர்அமைத்த“லயன்”வீடுகளிலேயேவாழ்கின்றனர். ஆனால் இந்தலயன் அறையோ,அந்தநிலமோஅவர்களின் உரிமையாககாணப்படவில்லை.
மொழிஉரிமைமற்றுமொருபிரச்சினையாகக் காணப்படுகின்றது. மலையகத்தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவாழும் மலைநாட்டுப் பகுதியில் - அரசநிறுவனங்களில் போதியளவதமிழர்கள் நியமிக்கப்படாமைமொழிஉரிமையைகேள்விக்குறியாகியுள்ளது.
அரசசேவைகளைஅணுகுவதற்கானஉரிமைபாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாமாவட்டத்தில்,அம்பகமுவ,நுவரெலியாபோன்றபிரதெசசெயலகங்கள் இரண்டு இலட்சமக்கள் தொகைக்குமேலாகக் கொண்டுகாணப்படுகின்றன. இது மக்கள் அரசசேவைகளைஅணுகுவதற்கானஉரிமையைகேள்விக்குறியாகியுள்ளது. பிரதேச சபை சட்டத்தின் 33வது சரத்து,தோட்டமக்கள் உள்ளுராட்சிஅமைப்புகளின் சேவையைபெற்றுக்கொள்வதில் தடைகளைஏற்பத்திவருகின்றது. இது சட்டசீர்த்திருத்தம் தேவைஎன்பதைஉணர்த்திநிற்கின்றது.
பெருந்தோட்டமக்களின் கல்வி,சுகாதார-வைத்தியசேவைக்கானஉரிமைகவனிக்கப்படவேண்டியதொன்றாகும். பெருந்தோட்டசுகாதார-வைத்தியதுறைதேசிய-சர்வதேசநியமங்களுக்குஏற்பதேசியமயமாக்கப்படவேண்டும். குறிப்பாகசிறுவர்,பெண்கள் இனவிருத்திசுகாதாரவிடயங்கள் கவணத்தில் கொள்ளப்படவேண்டியவையாகும்.
மேலும்,மலையகபெருந்தோட்டமக்களின் வாழ்வாதாரத்திற்கானஉரிமைமிககவனத்தில் கொள்ளப்படவேண்டியதொன்றாகும். பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு கூட்டுஓப்பந்தஅடிப்படையில் நாட்சம்பளம் நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனால் கடந்தஒருவருடகாலமாகசம்பளஉயர்வவழங்கப்படவில்லை. தொழிற்சங்க-முதலாளிமார்சம்மேளன கூட்டுஓப்பந்தபேச்சுவார்த்தைதோழ்வியைதழுவியுள்ளது. இங்குநுகுஊன் ஊழசிழசயவந ளுழஉயைட சுநளிழளெiடிடைவைல அல்லது ருN புடழடியட ஊழசிழசயவநன் ஒழுக்கவிதிகளைஅவர்கள் பின்பற்றுகின்றார்களாகஎன்பதுகேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இம்மக்களைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கானஉரிமையைஅணுகுவதில் பல்வேறுதடைகளும்,பாகுபாடுகளும் காட்டப்படுகின்றன. இம்மக்களின் அபிவிருத்திஉரிமையானது,சமூக,பொருளாதாரஅரசியல் உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதாகக் காணப்படுகின்றது. எவ்வாறெனினும்,பெரும்பாலானபெருந்தோட்டங்கள் கம்பனிகளினாலும்,மற்றும் துநுனுடீஃளுடுளுPஊ அரசநிறுவனங்களினாலும் நிர்வகிக்கப்படுகின்றமையால் தேசியஅபிவிருத்திதிட்டங்கள்,அபிவிருத்திநலன்கள் தோட்டங்களைஅணுகுவதில்,அல்லதுபெருந்தோட்டமக்கள் அத்திட்டங்களைஅணுகுவதில் பல்வேறுகுறைபாடுகள் மற்றும் தடைகள் காணப்படுகின்றன.
சிறுவர்கள்,பெண்கள் மற்றும் புலம்பெயர்தொழிலாளர்களுக்கெதிரானவன்முறைகளும்,பாகுபாடுகளும் அதிகரித்தவண்ணமுள்ளன. தோட்ட சூழ்நிலை,வாழ்வாதாரநிலைமை,மதுபாவனைஎன்பவை இவ்வாறானவன்முறைகளுக்குவழிகோளுகின்றன. இலங்கைபோன்றநாடுகள் பல்வேறுசர்வதேசஉடன்படிக்கைகளையும் மனிதஉரிமைநியமங்களையும் ஏற்றுக்கொண்டநாடுஎன்றஅடிப்படையில் சட்டஆட்சியும் நல்லாட்சியும் உறுதிப்படுத்தப்படவேண்டும். தயாரிக்கப்பட்டுவருகின்றபுதியயாப்புசீர்த்திருத்தம் மேற்படிவிடயங்களைஉள்ளடக்கும் எனநம்புகின்றோம் என்றுதிரு. பி.பி. சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.