அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்படும் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று முற்பகல் குறித்த கைதிகள் இருவரும் தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்திருந்தார்.
தம் மீதான விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியே உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாகவும்
அத்துடன் இரண்டு தமிழ்க் கைதிகள் உடல் நலத்துடன் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் இரண்டு தமிழ்க் கைதிகள் உடல் நலத்துடன் காணப்படுவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த இரண்டு கைதிகளினதும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை சட்டமாஅதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும் நாளைய தினம் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக பத்து தமிழ்க் கைதிகள் மெகசின் சிறைச்சாலைகள் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளதாக துஷார உபுல்தெனிய மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டிருந்த 14 தமிழ்க் கைதிகள் கடந்த 10 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தாம் புனர் புனர்வாழ்வை எதிர்ப்பார்க்கவில்லை எனவும், முழுமையான விடுதலையே தமக்கு வேண்டுமெனவும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 14 பேரும் தங்களின் சட்டத்தரணி ஊடாக அன்று நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.
குறித்த நபர்களை புனர்வாழ்வளிக்க வேண்டுமென சட்ட மாஅதிபர் திணைக்களம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையிலேயே தமிழ்க் கைதிகள் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

