உலகின் முதல் பெண் பிரதமரின் நூற்றாண்டு நினைவு தின பேச்சுப்போட்டி சம்மாந்துறையில்!




இன்று 
உலகின் முதல் பெண்பிரதமரான ஸ்ரீமாவோபண்டாரநாயக்க நூற்றாண்டுநினைவுதின பேச்சுப்போட்டி சம்மாந்துறையில்!
(காரைதீவு  நிருபர் சகா)

உலகின் முதலாவதுபெண்பிரதமர் என்ற சிறப்புப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோபண்டாரநாயக்கவின் நூற்றாண்டுதினத்தையொட்டி சம்மாந்துறைவலயமாணவர் மத்தியில் இன்று 18ஆம் திகதி வியாழக்கிழமை வலயமட்ட பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

சம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனையின் அய்ன்ஸ்ரீன் மண்டபத்தில் சம்மாந்துறைவலயகல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் போட்டிநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சரித்திரம் புகழும் உலகத்தலைவர்கள் வரிசையிலிடம்பெற்ற ஸ்ரீமாவோபண்டாரநாயக்க அம்மணி தொடர்பாக இன்றைய இளஞ் சந்ததியினரின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக இப்போட்டிநிகழ்ச்சிகள் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைவாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறைவலயகல்விப்பணிப்பாளர்
எம்.எஸ்.சஹதுல்நஜீம் தெரிவித்தார்.

1916 ஏப்ரல் 17ஆம்திகதி இலங்கையின் பலாங்கொடையில் பிறந்த ஸ்ரீமாவோபண்டாரநாயக்க 2000ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 10ஆம் திகதிபொதுத்தேர்தல் நடைபெற்றஅதேதினத்தில் மாரடைப்பினால் காலமானார்.

இலங்கையைபிரித்தானியரிடமிருந்துபூரணமாகவிடுவித்துகுடியரசாக்கிமுதலாவது 1972 குடியரசுயாப்பின் சிற்பியான இவர் 1976இல் அணிசேரா இயக்கமாநாட்டைநடாத்திபெருமைசேர்த்ததுடன் 24வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த இந்தியகுடியுரிமைப்பிரச்சினைதொடர்பில் அப்போதைய இந்தியபிரதமர் லால்பகதுர் சாஸ்திரியுடன்பேசிதீர்த்தமையும் இவரதுஆளுமைக்குசாட்சியங்களாகும்.

40ஆண்டுகள் அரசியல் அரங்கில் திகழ்ந்த ஸ்ரீமாவோ இலங்கையின் பிரதமராக 3 தடவைகள் அலங்கரித்துள்ளார். 1960 1970 1994 ஆகியஆண்டுகளில் இடம்பெற்றபொதுத்தேர்தலில்இவர் பிரதமராகதெரிவுசெய்யப்பட்டார்.