கிண்ணியா கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா அண்ணன் நகர் பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
இந்த மாணவர் கிண்ணியா அல் அஸான் வித்தியாலயத்தில் தரம் 9 ல் கல்வி கற்று வந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் பொதுமக்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

