-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-மட்டக்களப்பு, ஏறாவூர் பொலி;ஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிரான் பிரதேசத்தில் உள்ள வீதிகளில் கஞ்சாவுடன் நடமாடிய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஸ்தலத்துக்குச் சென்ற பொலிஸார் 10860 மில்லி கிராம் கஞ்சாவுடன் 35 வயதான நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலும் விசாரணைகளில் ஈடுபட்டுள்;ளனர்
