மூன்று பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலியப் படையினாரால் சுட்டுக்கொலை



ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் பாலஸ்தீன இளைஞர்கள் மூவரை இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
பல தசாபதங்களாக மேற்குக்கரைப் பகுதி பதற்றம் நிறைந்த ஒன்றாகவே உள்ளது.

இவர்களில் இருவர் ஜெனின் நகருக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை கற்களைக் கொண்டு தாக்கி பின்னர் இராணுவ வீரர்களை நோக்கிச் சுட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்டுள்ள மூன்றாவது நபர் ஜெரூசலேம்-பெத்தலஹம் எல்லைப் பகுதியில் இருந்த காவல்துறையினரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும் இத்தாக்குதல் சம்பவங்களில் எந்தவொரு இஸ்லேரியரும் காயமடையவைல்லை.
கடந்த சில மாதங்களில் மட்டும், 360க்கும் அதிகாமான் பாலஸ்தீனர்கள் மேலோங்கிய வன்முறைகள் காரணமாக கொல்லப்பட்டுளனர்.
இதேகாலப் பகுதியில் 26 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.