மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் உகந்த தண்டனை விதிக்கும் என்பதை எம்மால் எதிர்பார்க்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய கட்சி அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும் அண்மைய நாட்களாக இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

