எதிர்வரும் 24ஆம் திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளின் நேரடி ஒலி ஒளிபரப்பு உரிமை, TNL தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து கிரிகெட் ரசிகர்கள் உட்பட பலரும் அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.
அரசியல் காரணங்களுக்காக அன்றி, TNL தொலைக்காட்சியின் தெளிவின்மை தொடர்பிலேயே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
TNL தொலைக்காட்சியின் இணையத்தில் தமது சேவை நாடு முழுவதும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் பல இடங்களிலும் அந்த தொலைக்காட்சி சேவை தெளிவற்றதாகவே உள்ளதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னைய அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்தவின் தொலைக்காட்சியான கூறப்படும் CSN இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உரிமத்தை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நேரடி ஒலி ஒளிபரப்பு செய்துவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில் TNL தொலைக்காட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூத்த சகோதரர் ஷான் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

