(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் – பெய்திலி பிரிவுக்கு சொந்தமான வனப்பகுதியில் 17.02.2016 அன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பத்து ஏக்கரைக் கொண்ட இந்த வனப்பகுதியில் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
17.02.2016 அன்று மதியம் 3 மணியளவில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திம்புள்ள பத்தனை பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த பகுதியில் எவராவது தீ வைத்ததால் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதா? அல்லது இயற்கையான காட்டுத்தீயா? என இதுவரை தெரியவில்லை என திம்புள்ள பத்தனை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

