பயணிகள் விமானங்களில் சரக்குப் பகுதியில் லித்தியம்-ஐயோன் பேட்டரிகளைக் கொண்டுசெல்வதை ஐநா மன்றத்தின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தடை செய்திருக்கிறது.
மடிக்கணினிகள் ( லேப்டாப்) மற்றும் கைத்தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் இந்த பேட்டரிகள் தீவிபத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதாக விமானிகளும் , விமானத் தயாரிப்பு நிறுவனங்களும் கவலை வெளியிட்டிருந்தன.
மீண்டும் மின்சாரம் ஏற்றக்கூடிய இந்த பேட்டரிகள் ( ரீச்சார்ஜபிள்) தானே தீப்பிடித்து, விமானத்தையே அழிக்கவல்ல பெருந்தீயை உண்டாக்கக்கூடியவை.

ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரும் இந்தத் தடையில், பயணிகளோ அல்லது விமான ஊழியர்களோ தங்களுடன் எடுத்துச் செல்லும் மடிக்கணினிகளில் இருக்கும் லித்தியம்-ஐயோன் பேட்டரிகளுக்கு விலக்கு உண்டு.
பல விமான நிறுவனங்கள் இது போன்ற பேட்டரிகளை சரக்காக எடுத்துச்செல்வதை தாமாகவே முன்வந்து நிறுத்தியிருக்கின்றன.