ஜனாதிபதி இன்று ஜேர்மனி பயணம்



உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (15) ஜெர்மனி செல்லவுள்ளார். ஜெர்மனிக்கான விஜயத்தின் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஆஸ்த்திரியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இம்மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது ஜேர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஜெர்மனி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அங்கு அரச பிரதானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். தொடர்ந்து ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர், பொருளாதார விவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.