U-19 உலகக் கிண்ணம் : மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன்




வயதின் கீழ் உலகக் கிண்ண கிரிகெட் போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஷெர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இப்போட்டில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா அணியை முதலில் துடுப்பெடுத்தாட்டுமாறு பணித்தது. அதற்கமைய களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் அணியின்  பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இறுதியில் 45.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்திய அணியி்ல் அதிகபட்சமாக சர்ப்ராஷ் கான் 51 (89) ஓட்டங்களை பெற்றுகொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. அந்த அணியில் கார்டி அதிகபட்மாக 52 ஓட்டங்களைப் பெற்றுகொண்டார்