மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச 750 பாடசாலை மாணவர்களுக்கும் 41 ஆசிரியர்களுக்கும் சுத்தமான குடிநீரும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான அதிகாரி ஏ.சி. பைஸர்கான்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த 750 பாடசாலை மாணவர்களுக்கும் 41 ஆசிரியர்களுக்கும் சுத்தமான குடிநீரும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள நிலையத்தின் இலங்கைக்கான அதிகாரி ஏ.சி. பைஸர்கான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலுள்ள இரண்டு பாடசாலைகளில் சுமார் 15 இலட்ச ரூபாய் செலவுத் தொகையில் சுத்தமான குடிநீர் மற்றும் மலசல கூடம், கிணறு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து பாடசாலை நிருவாகத்திடம் கையளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மைலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கல்குடா கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய பிரதேசமான ஒருமுழச்சோலை ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்கும் சுமார் 750 மாணவர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் 41 ஆசிரியர்களின் நன்மை கருதி அங்கு சுத்தமான குடிநீர் வசதி, நவீன மலசலகூட வசதி மற்றும் பாதுகாப்பான கிணறு என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
'அனைவருக்கும் கல்வி' என்கின்ற அற்புதமான திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள அனைத்து சமூக மாணவர்களுக்கும் கல்விக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் முஸ்லிம் எயிட் நிறுவனம் அர்ப்பணித்துச் செயலாற்றுகின்றது. அந்த அடிப்படையிலேயே இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.