தாகூர்மணி இல்லம் சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.




காரைதீவு இ.கி.மி.பெண்கள் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை முதற்றடவையாக பாடசாலை மைதானத்தில் அதிபர் செ.மணிமாறன் தலைமையில் நடைபெற்றபோது தாகூர்மணி இல்லம் 281புள்ளிகளைப்பெற்று முதலிடத்தைப் பெற்றது. அவ்வில்லம் இவ்வாண்டுக்குரிய சாம்பியனாகவும் தெரிவுசெய்யப்பட்டது.

245புள்ளிகளுடன் காதாம்பரி இல்லம் இரண்டாமிடத்தையும் சாரதாமணி இல்லம் 206புள்ளிகளைப்பெற்று மூன்றாமிடத்தையும் சுவீகரித்துள்ளது.இவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் வழங்கிவைத்தார். கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர்  சகா.