ஊனமுற்றோருக்கு பணம் வசூலிப்பதாக பொய் கூறி பணத்தை பெற்று நம்பிக்கை மோசடி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்
ஆலையடி வேம்பில் சம்பவம்
-எஸ்.ரி.ஜமால்டீன்-
மட்டக்களப்பு கல்லடி பிரததேசத்தில் உள்ள தரிசனம் விழிப்பணர்வு அற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள ஊனமுற்ற பிள்ளைகளுக்கென்று பொய் கூறி பல தடவை டொக்டர் ஒருவரிடம் பணத்தை வசூலித்து மோசடி செய்த சந்தேக நபரான பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி.நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.
கடந்த 13 ஆம் திகதி (13.02.2016) நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ஏறாவூர் களுவங்கேணி பாடசாலை வீதியைச்சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தான் கல்லடி தரிசனம் விழிப்புணர்வற்றோர் இல்லத்தில் உள்ள ஊனமுற்ற பிள்ளைகளுக்காக நிதி சேகரிப்பதாக நம்பவைத்து கடந்த 5 வருடங்களாக அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேசத்தை சேர்ந்த சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் ஒருவரிடம் பணம் பெற்று வந்துள்ளார்.
பணத்தை பெற்று பணத்தை பெற்றதற்கான றிசிட்டையும் பெண் கொடுத்து வந்துள்ளார் இதில் சந்தேகப்பட்ட டொக்டர் இல்லத்துக்கு தொலை பேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது இவ்வாறான ஒரு பெண்ணை நிதி சேகரிக்க அனுப்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து டொக்டர் இம்மாதம் 12 ஆம் திகதி அப் பெண் பணம் வசூலிப்தற்காக வந்ததையடுத்து பொலிசாருக்கு தகவலை தெரிவிததுள்ளார் ; இதன் பின் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணை கைது செய்ததுடன் றிசிட் புத்தகத்தையும் கைப்பற்றினர்.பின்னர் குறித்த பெண்ணை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

