(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் தற்போது குளிரான காலநிலையாக நிலவுகின்றது.
அதிகாலையில் கடுமையான குளிர் காணப்படுவதோடு அதிகமான பிரதேசங்களில் பனிமூட்டங்களும் காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதைகளில் பனிமூட்டங்கள் காணப்படுவதனால் வாகன சாரதிகள் வாகனங்கள் செலுத்துவதில் பல சிரமங்கனைள எதிர்நோக்குவமாக தெரிய வருகின்றது
இதன் காரணமாக வாகனங்களில் முன்விளக்கை ஒளிரவிட்டு செல்லுமாறு அவ்அவ்பகுதிகளில் உள்ள போக்குவரத்து பொலிஸார் வாகன சாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு சில பகுதிகளில் அதிகமாக பனி பொழிவதால் தேயிலை செடிகள் கருக கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

