நாரஹேன்பிட்டியிலுள்ள அலன் மதினியாராமவில் யானைக் குட்டியொன்றை தம்மிடம் வைத்திருந்ததற்கான போதிய சான்றுகள் காணப்படுவதனால், தேரரை சந்தேகநபராக குறிப்பிடலாம் என சட்ட மா அதிபரினால் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, குறித்த தேரர் சட்டத்தை மீறியுள்ளதனால், இவரிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

