ஒழுக்காற்று தீர்மானம் எடுக்க ஸ்ரீ.ல.சு.க. செயற்குழு இன்று கூடுகிறது



கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டு, கட்சியை தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்கும் நபர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுப்பது இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சட்டங்களை மீறியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு இன்று நண்பகல் அக்கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடுகின்றது.

கட்சியை விமர்சித்துக் கொண்டு செயற்படும் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சி சபைகளிலுள்ள உறுப்பினர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்